கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்து : குழந்தை பலி, ஆபத்தான நிலையில் மற்றொரு குழந்தை!

#SriLanka #Accident #Kilinochchi
Thamilini
1 year ago
கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்து : குழந்தை பலி, ஆபத்தான நிலையில் மற்றொரு குழந்தை!

கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 2 வயது குழந்தை உயிரிழந்துள்ளதுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்துள்ளனர். 

 நேற்று (25) இரவு 7 மணியளவில் டிப்பர் ரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

 விபத்தின் பின்னர் மோட்டார் சைக்கிள் வீதியில் இருந்து சுமார் 100 மீற்றர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

 சம்பவம் தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் குடிபோதையில் இருந்ததாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். 

 விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 2 வயதுக் குழந்தை உயிரிழந்துள்ளதுடன், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் 6 வயதுக் குழந்தை படுகாயமடைந்த நிலையில்  கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

 பின்னர், ஆபத்தான நிலையில் இருந்த குழந்தையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!