அஸ்வெசும நிலுவைத்தொகையை வழங்கத் தீர்மானம்!
#SriLanka
Mayoorikka
1 year ago
அஸ்வெசும கொடுப்பனவை பெறும் குடும்பங்களுக்கு செலுத்தப்பட வேண்டிய நிலுவைத்தொகையை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேற்படி குடும்பங்களின் வங்கிக் கணக்குகளில் நிலுவைத் தொகையை வைப்பிலிடவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
அஸ்வெசும கொடுப்பனவின் முதலாம் கட்டத்தின் கீழ் 212,000 423 குடும்பங்களுக்காக இதுவரை செலுத்தப்படாத நிலுவைத் தொகையை வைப்பிலிடவுள்ளதாக சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
1314 மில்லியன் ரூபாவுக்கும் மேற்பட்ட தொகையை நிலுவைத் தொகையாக வைப்பிலிட வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.