9 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இருவர் கைது!
#SriLanka
#Arrest
Thamilini
1 year ago
9 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் இரண்டு வர்த்தகர்கள் கொழும்பு கொட்டுவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மற்றுமொரு வர்த்தகரிடம் இலஞ்சம் பெறும் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நகர அபிவிருத்தி அதிகார சபையினால் கையகப்படுத்தப்பட்ட தொழிலதிபரின் உறவினரின் காணிக்கான நட்டஈட்டை விரைவுபடுத்துவதாக உறுதியளித்து இந்த இலஞ்சம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.