38 வயதுடைய ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒருவர் கைது!
#SriLanka
#Arrest
Thamilini
1 year ago
போதைப்பொருளுடன் வெளிநாட்டு பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் காலி பிரிவு அதிகாரிகளினால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரிடம் இருந்து 4 கிராம் கொக்கெய்ன் மற்றும் 06 கிராம் 12 மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
முதற்கட்ட விசாரணைகளில் சந்தேக நபர் உரிய போதைப்பொருட்களை தபால் மூலம் இலங்கைக்கு இறக்குமதி செய்து இந்த கடத்தலை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.
38 வயதுடைய ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.