யாழ்ப்பாணத்தில் சிங்கள குடியேற்றமா? காணி அதிகாரசபை ஊடாக விரைவு நடவடிக்கை (பிரத்தியேக செய்தி)

#SriLanka #Jaffna #Tamilnews #House #lanka4_news #lanka4.com
Lanka4
3 months ago
யாழ்ப்பாணத்தில் சிங்கள குடியேற்றமா? காணி அதிகாரசபை ஊடாக விரைவு நடவடிக்கை  (பிரத்தியேக செய்தி)

இலங்கைத் திருநாட்டில் 40 வருடங்களாக பரம்பரை மற்றும் தாழ்ந்த அரசியல் கொள்கைகளோடு இயங்கிக் கொண்டிருந்த இலங்கை இப்பொழுது ஒரு தனித்துவமான பொதுமக்கள் நலங்குகின்ற ஒரு கட்சியினூடாக நடத்தப்பட்டு வருகிறது அவர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.

 அவர்கள் தான் NPP கட்சி. அவர்களை மக்கள் பாராளுமன்ற தேர்தலிலும் சரி ஜனாதிபதி தேர்தலிலும் சரி அமோக வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள் மக்கள் அவர்களை அரியாசனத்தில் ஏற்றி இருக்கிறார்கள். பல விடயங்கள் நல்ல விடயங்கள் மதத்திற்கும் சார்பில்லாத ஆட்சி நல்லபடியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

உலக நாடுகளும் ஏற்றிருக்கிறது தற்பொழுது சீனாவுக்கு செல்வதாக இருப்பதாக அறியப்படுகிறது. அதோடு கூட இனம் சார்ந்த மதம் சார்ந்த விடயங்கள் துவேசங்கள் குறைந்திருக்கிறது இல்லாமல் போயிருக்கிறது என்று கூற முடியாது குறைந்திருக்கிறது. ஆனால் ஒரு சில இடங்களிலே ஒரு சில விடயங்கள் அது சரி தவறு தாண்டி நடைபெற்றுக் கொண்டிருப்பதை நாங்கள் ஊடகம் lanka4 ஊடாக அறிந்து கொண்டு இருக்கின்றோம்.

 லங்கா4 ஊடாகத்தினூடாக, நாங்கள் யாழ்ப்பாண காணி அதிகாரசபை ஊடாக வந்த செய்தி ஒன்றை இங்கே பார்த்திருக்கிறோம். 

 இது நாங்கள் லங்கா4  சிங்கள மக்களுக்கு எதிராகவோ அல்லது தமிழ் மக்களுக்கு ஆதரவாகவும் அல்ல இருந்தாலும் கூட சிங்கள மக்களினால் ஒரு குறிப்பிட்ட சிங்கள மக்களினால் யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற காணி அலுவலகத்திற்கு ஒரு கடிதம் எழுதப்பட்டிருக்கிறது அதாவது தங்களுடைய சிங்களவர்களுடைய சிங்கள அதாவது சகோதர இனச் சிங்கள மக்களுடைய தங்களுடைய மூதாதையர் உடைய சொத்துக்கள் காணிகள் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது அதனை மீட்டு தருமாறு யாழ்ப்பாணதட்டில் உள்ள கணி அலுவலர்கள் அமைச்சுக்கு அவர்கள் கடிதம் அளித்திருக்கிறார்கள்.

 அதற்கு அவர்களும் அந்த அலுவலகத்தில் இருப்பவர்களும் பொறுப்பானவர்களும் நாங்கள் அதனை சரிவர விசாரித்து இதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், நீங்கள் அதற்கான சான்றிதழ்களை, ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டு இருக்கிறார்கள்.

 அந்த சமர்ப்பிப்பதற்கான ஆதாரங்களை இந்த சகோதர சிங்கள மக்கள் ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தியை நாங்கள் அறியக்கூடியதாக இருக்கிறது. இது உண்மையா தவறா அல்லது பொய்யா அல்லது இனத் துவேசத்தை தூண்டுகின்ற விடயமா என்பதை தாண்டி இது என்ன நடக்கப்போகின்றது என்பதை நாங்கள் பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும். 

 இதுதொடர்பான மேலதிக தகவல்களை அறிவதற்கு இந்த இணைப்பினை கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!