போராட்ட பின்னணியில் இருந்து வந்த என்பிபி அரசாங்கம் தமிழ் அரசியல் கைதிகள் இல்லை என கூறுவது இரட்டை வேடமா?

#SriLanka #Arrest #prices #Lanka4 #lanka4Media #NPP
Mayoorikka
1 month ago
போராட்ட பின்னணியில் இருந்து வந்த என்பிபி அரசாங்கம் தமிழ் அரசியல் கைதிகள் இல்லை என கூறுவது இரட்டை வேடமா?

அண்மையில் அரசியல் கைதிகள் தொடர்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சிறையில் அரசியல் கைதிகள் இல்லை" என்ற ஒரு கருத்தை வெளியிட்டு இருக்கின்றார்.

 உண்மையில் அரசியல் காரணங்களுக்காக ஆயுதம் ஏந்திப் போராடிய காரணத்திற்காக கைது செய்யப்பட்டவர்கள் என்பதனால் அவர்களை தமிழ் சமூகம் அரசியல் கைதிகளாக கருதுகின்றோம். இதன் அடிப்படையில் அவர்கள் சாதாரண குற்றவியல் கைதிகளிலிருந்து வித்தியாசமாகப் பார்க்கப்பட வேண்டியவர்கள்.

 பயங்கரவாத சட்டதில் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற்கைதிகளாகவும், மற்றும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூக மயப்படுத்தப்பட்ட பின்னரும், நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டபின்பும் மீளவும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட சிலரும் சிறைகளில் உள்ளனர். 

 அத்தோடு ஐந்து ஆண்டுகள் தொடக்கம் முப்பது ஆண்டுகள் வரை தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மற்றும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் தற்பொழுதும் சிறைகளில் அரசியல் கைதிகளாகவே உள்ளனர். இவ்வாறானவர்கள்தற்போதும் சிறைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் npp அரசாங்கத்தில் உள்ள ஒரு அமைச்சர் அதுவும் நீதி அமைச்சர் சிறைகளில் அரசியல் கைதிகள் இல்லை என கூறுவது வேடிக்கைக்குரிய விடையம்.


 கடந்தகாலங்களில் அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடிய தமது கட்சி அங்கத்தவர்களை “அரசியல் போராளிகள்” என்று கூறிய ஜேவிபி, தற்போது, பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் கைதிகளை “அரசியல் கைதிகள்” என அங்கீகரிக்க மறுக்கிறது. கடந்த காலங்களில் இருந்த அரசாங்கங்களும், சிறையில் அரசியல் கைதிகள் இல்லை என்ற கருத்தைத்தான் எல்லா அமைச்சர்களும் சொன்னார்கள். 

பெரும்பான்மை அரசாங்க தரப்பு அப்படிதான் சொல்வார்கள். அவர்களுக்கு அவர்கள் "பயங்கரவாதி". ஆனால் ஒரு போராட்ட கலாச்சாரத்தில் இருந்து வந்த ஜேவிபி சார் என்பிபி அரசாங்கம் இவ்வாறு கூறுவது வேடிக்கையான ஒன்று.

 இந்நாட்டில், 1971ல் தமிழ் இளைஞர் ஆயுதம் தூக்க முன்னமே ஆயுதம் தூக்கி பின்னர், 1989லும் ஆயுதம் தூக்கி ஜேவிபி போராட்டம் செய்த போது, கைதாகி சிறையில் இருந்த ஜேவிபி போராளிகளை, அன்றைய அரசாங்கம், "பயங்கரவாதிகள்" என்றது. ஆனால் ஜேவிபியினர், "இல்லை, அவர்கள் அரசியல் போராளிகள்" என்றார்கள். அப்படி இருக்கையில் தற்பொழுதும் சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை npp அரசாங்கத்தின் எம்பியாகிய ஹர்ச நாணயக்கரா இவ்வாறு கூறுகின்றார் என விமர்சனங்களும் எழுந்த வண்ணம் உள்ளன.

 அன்று ஆயுத போராட்டம் செய்த ஜேவிபியே, இன்று இப்படி கூறுகிறது. “அரசியல் கைதிகள் இல்லை” என்று கூறி, அவர்களுக்கு பயங்கரவாதிகள் பட்டம் சூட்ட முனைகிறது. 1971ல், தமிழ் இளைஞர் ஆயுதம் தூக்க முன்னமே, ஆயுதம் தூக்கிய தமது அங்கத்தவர்களை அரசியல் போராளிகளாக அடையாளம் காணும் ஜேவிபி, கைதாகி சிறையில் உள்ள தமிழ் இளைஞர்களை, அரசியல் கைதிகள் இல்லை என்று கூறுகிறது. npp அரசாங்கம் சொல்தொன்று செய்வதொன்றாக உள்ளது. ஏன் இந்த இரட்டை வேடம் எனறும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. 

 இவ்வாறு இருக்கையில் ஒரு போராட்ட காலத்தில் இருந்து வந்த அரசாங்கத்தினால் கூட குறித்த தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியாவிடின் பெரும்பான்மை இனத்தின் எந்தவொரு அரசாங்கத்தினாலும் அவர்களை விடுதலை செய்ய முடியாது என்பதே  திண்ணம்.

இந்த செய்தியினை ஒலி வடிவில் கேட்க இந்த இணைப்பினை கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!