தீரும் நிலையில் உள்ள எரிபொருள்கள் : மீண்டும் வரிசைக்கு தயாராகும் மக்கள்!

#SriLanka #Fuel
Dhushanthini K
2 months ago
தீரும் நிலையில் உள்ள  எரிபொருள்கள்  : மீண்டும் வரிசைக்கு தயாராகும் மக்கள்!

எரிபொருள் நடவடிக்கைகளில் இருந்து விநியோகஸ்தர்கள் விலகியுள்ள நிலையில் நாடு முழுவதும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறகது. 

பல இடங்களில் மக்கள் வரிசையில் நிற்பதை காணக்கூடியதாக உள்ளது. 

இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் எரிபொருள் நிலையங்களில் கையிருப்பில் உள்ள எரிபொருட்கள் நாளையுடன் (03.03)  தீர்ந்துவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள எரிபொருள் விநியோக சங்கத்தின் தலைவர் குசும் சந்தனநாயக்க  இன்று முதல் புதிய விநியோக கோரல்கள் எதுவும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்படாததால், திங்கட்கிழமைக்குள் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என கூறியுள்ளார்.

 கடந்த காலங்களில் சங்கம் ஒருபோதும் வேலைநிறுத்த நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்றாலும், விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்பட்ட 3% கொடுப்பனவை நீக்கிவிட்டு, அதை புதிய சூத்திரத்தால் மாற்றுவதற்கான இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தற்போதைய முடிவால் தங்களுக்கு வேறு வழியில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


பொதுமக்களுடைய நன்மை கருதி 
லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!