நிலுவையில் உள்ள 11 இலட்சம் வழக்குகளை விரைந்து முடிக்க உத்தரவு!
#SriLanka
#Investigation
#Court
Dhushanthini K
2 months ago

நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரணை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
11 இலட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
பொருளாதார பாதிப்பிற்கு மத்தியலும் நீதி அமைச்சுக்கு 24 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என வலியறுத்தியுள்ளார்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



