ஜுன் மாதத்தில் மீண்டும் மின்சார கட்டணத்திருத்தம் - மின் கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு!

#SriLanka #Electricity Bill
Dhushanthini K
2 months ago
ஜுன் மாதத்தில் மீண்டும் மின்சார கட்டணத்திருத்தம்  - மின் கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு!

நாட்டில் நிலவும் வறட்சி நிலைமை மற்றும் எரிபொருள் அடிப்படையிலான மின்சார உற்பத்தியின் அளவை பொறுத்து, ஜூன் மாதம் மின்சார கட்டணத்தில் திருத்தம் செய்யப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

 பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரையின் பேரில், நாட்டின் தற்போதைய விதிமுறைகளின்படி, மின்சார கட்டண மாற்றங்கள் ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒருமுறை மேற்கொள்ளப்பட வேண்டும் என இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் பொறியியலாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்தார்.

மின்சார உற்பத்தி செலவுகள் அதிகரிப்பு காரணமாக கட்டணம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மின்சக்தி அமைச்சர் குமார ஜயகொடி அண்மையில் குறிப்பிட்டிருந்தார். தற்போதைய வறட்சி காரணமாக நிலைமை கடினமாக இருப்பதாகவும், மே மாதத்தில் மழை பெய்யுமாயின் செலவுகள் குறையலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

images/content-image/1740890209.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!