ராஜபக்ஷக்களின் காலத்தில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?

ராஜபக்ஷர்களின் ஆட்சியில் 34 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் தமிழ் பேசும் ஊடகவிலாளர்கள் என சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்றும் கேள்வி எழுப்பினார்.
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலை (2009), திருகோணமலை ஐந்து மாணவர் படுகொலை (2006), 11 தமிழ் மாணவர்கள் கடத்தல் - படுகொலை , கீத் நொயார் படுகொலை , லசந்த விக்கிரமதுங்க படுகொலை (2009), பிரகீத் ஹெக்னலிகொட ( 2010) உள்ளிட்டவை பிரதானவையாக கருதப்படுகின்றன.
லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பில் கடந்த மாதமளவில் பரவலாக பேசப்பட்டது. சந்தேக நபர்களை விடுவிப்பதாக சட்டமா அதிபர் எடுத்த தீர்மானம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஆகவே இவ்விடயத்தில் ஏதேனுமாரு மர்மம் உள்ளது. ஏனைய படுகொலைகள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?
இலங்கை தமிழ்ச்சங்கம் 2004 முதல் 2009 ஆம் ஆண்டு முதல் படுகொலை செய்யப்பட்ட 34 தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் ஊடகவியலாளர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள்” என சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்




