கிண்ணியா வைத்தியசாலை - பிரச்சனை தீரும்வரை பகிரவும் : பாராளுமன்றம் வரை ஒலிக்கவேண்டும்

#Hospital #Patients #Kinniya
Prasu
2 months ago
கிண்ணியா வைத்தியசாலை - பிரச்சனை தீரும்வரை பகிரவும் : பாராளுமன்றம் வரை ஒலிக்கவேண்டும்

நடுத்தீவு வைத்தியசாலையில் நடந்த பிரச்சினை கிண்ணியா வைத்தியசாலையில் நடக்கும் முன் தீர்வினை எடுங்கள் காரணம் கிண்ணியா வைத்தியசாலையிலும் பிரச்சினை அதிகரித்துக்கொண்டு செல்கின்றது.


01.பிரச்சினை 

எனது மகளுக்கு சுகமில்லை என்று கண்டி தனியார் மருத்துவமனையில் அனைத்து சோதனைகளும் எடுத்துவிட்டு வயிற்றுக்குள் பிரச்சினை இருக்கு கிண்ணியா வைத்தியசாலையில் அவசர அவசரமாக அனுமதிக்க சொல்லி இருந்தார்கள்.  அனுமதி செய்யவதற்காக நானும் எனது மனைவியும் மகளை கூட்டிக்கொண்டு சென்ற போது அங்கிருந்த பாதுகாவலர் சத்தமாக மிரட்டி வெளியே போ வெளியே போ என்று துரத்தினான்.

அப்போது Casim Doctorரும் இருந்தார் மற்றும் செவிலியர்களும் இருந்தார்கள் அதில் ஒரு மாற்று மத செவிலியர் ஒருவர் நோயாளியோடு அப்படி பாய வேண்டாம் என்று சிங்களத்தில் சொன்னார்.

அன்று நானும் கோவமடைந்து இருந்தால் பிரச்சினை  வந்திருக்கும் நடுத்தீவில் மாதிரி வெளியே நிற்க்கும் பாதுகாவலருக்கு யார் அந்த அதிகாரத்தை வழங்கியது?

02.பிரச்சினை

எனது நண்பர்கொழும்பு மஹாரகம வைத்தியசாலையில் சிகிச்சை செய்துள்ளார்கள். அங்கு ஊசி ஒன்று வழங்கி  கிண்ணியா வைத்தியசாலையில் கொடுத்து அடிக்குமாறு மருத்துவர் கிண்ணியா வைத்தியசாலைக்கு வேண்டுகோள் செய்துள்ளார்.

அதை கொண்டு சென்ற நோயாளியோடு கண்ணியம் இல்லாமல் ஒருபெண் மருத்துவர் எங்களால அடிக்க முடியாது நீங்கள் வேறு எங்கையாவது  போயிட்டு அடிங்கள் என்று மிகவும் கடுமையாக நடத்தியுள்ளார். வைத்தியசாலை ஒன்றும் அவருடையதல்ல பொது மக்களுக்குறியது.இவருக்கு யார் அந்த அதிகாரத்தை வழங்கியது?

03.பிரச்சினை

இன்னும் ஒரு நண்பரின் மனைவிக்கு இருமல், தடிமல், வாந்தி, காச்சல் என்று கிண்ணியா வைத்தியசாலைக்கு இரவு 10.30 மணியளவில் அனுமதி செய்ய சென்ற போது மருத்துவர் சரியான தூக்கம் எழும்பி வந்து நாய் மாதிரி நோயாளியோடு கத்தியுள்ளார்.

23/02/2025 இரவு 10.30க்கு அனுமதி செய்து 24/02/2025 காலை 11 மணிக்கு Ticket வெட்டி இருக்கார்கள் நோயாளிக்கு கொஞ்சம் கூட குணமாகவில்லை. 

மறுநாள் தனியார் மருத்துவமனைக்கு சென்று Saufan மருத்துவரிடம் மருந்து எடுத்து சரிவராமல் தற்போது 27/02/2025 இரவு 11 திருகோணமலை வைத்தியசாலையில் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு ICU ல் சிகிச்சை பெற்று வருகிறார். 


4.பிரச்சினை

இது போன்று இன்னுமொரு சகோதரியை கிண்ணியா வைத்தியசாலையில் காச்சல், வாந்தி, என்று அனுமதி செய்து மறுநாள் வெளியேற்றப்பட்டுள்ளார்.

அவருக்கும் நோய் அதிகரித்து தற்போது திருகோணமலை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு
10ம் Ward Bed Number 07ளில் சிகிச்சை பெற்று வருகிறார்

என்ன நடக்கிறது எமது கிண்ணியா வைத்தியசாலையில்
இதனால் தான் கிண்ணியா வைத்தியசாலைக்கு வராமல் திருகோணமலை வைத்தியசாலைக்கு அதிகமான மக்கள் செல்கின்றனர். இதனை நினைக்கும் போது கவலை அளிக்கிறது.

இது அனைத்துக்கும் என்னிடம் ஆதாரம் உள்ளது. மற்றும் இது எனக்கு தெரிந்த பிரச்சினை மாத்திரமே தெரியாமல் இன்னும் எத்தனையோ பிரச்சினை இருக்கலாம்.
நீங்கள் அனைவரும் இணைந்து கிண்ணியா மக்களுக்கு ஒரு தீர்வினை பெற்றுத்தருவீர்கள் என்று நம்புகிறோம்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்


images/content-image/1740900293.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!