பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீட்டிப்பு!
#SriLanka
#weather
#Land_Slide
Dhushanthini K
2 months ago

நிலவும் மோசமான வானிலை காரணமாக பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பதுளை மாவட்டத்தில் உள்ள ஹாலி எல, பசறை, கண்டகெட்டிய, பதுளை, ஹப்புத்தளை, மீகஹகிவுல, உள்ளிட்ட பகுதிகளுக்கான எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பிரதேச செயலகப் பகுதிக்கு நிலை 01 இன் கீழ் மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்




