கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல்!

#SriLanka #Arrest #Kanemulla Sanjeeva
Dhushanthini K
2 months ago
கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல்!

கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட மேலும் இரண்டு சந்தேக நபர்களை வரும் ஏழாம் திகதிவரை  விளக்கமறியளில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இன்று (03.03) இந்த உத்தரவை பிறப்பித்தார். 

 சந்தேக நபர்களான மினுவங்கொடையைச் சேர்ந்த உதார நிர்மல் குணரத்ன மற்றும் துனகஹா மினுவங்கொடை சாலையைச் சேர்ந்த நளின் துஷ்யந்த ஆகியோர் குற்றத்தைச் செய்வதற்கு சிம் கார்டுகளை வழங்கியதாகவும், கொலைக்கு உதவியதாகவும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். 

1979 ஆம் ஆண்டு 48 ஆம் எண் பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் அவர்கள் 72 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!