தலைமறைவான முன்னாள் பொலிஸ் மா அதிபரை கண்டுபிடிக்க பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

#SriLanka
Mayoorikka
2 months ago
தலைமறைவான முன்னாள் பொலிஸ் மா அதிபரை கண்டுபிடிக்க பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் (IGP) தேஷபந்து தென்னகோன் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.\

 இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். தேஷபந்து தென்னகோனை கண்டுபிடிக்கும் பணி குற்றப் புலனாய்வுத் துறையிடம் (CID) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 மேலும் அவரைக் கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவு ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர் தொடர்புடைய தகவல்கள் தெரிந்தவர்கள் உடனடியாக சிஐடிக்கு தெரிவிக்குமாறு பொலிஸ் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

 அத்துடன், முன்னாள் பொலிஸ் மா அதிபர் நாட்டை விட்டு தப்பிச் சென்றதற்கான எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

images/content-image/1741229635.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!