வடக்கின் போர் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பம்!
#SriLanka
Mayoorikka
2 months ago

வடக்கின் போர் என அழைக்கப்படும் யாழ். மத்திய கல்லூரிக்கும், சென் ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான 118 வது துடுப்பாட்டம் இன்று யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது.
யாழ். மத்திய கல்லூரியின் அதிபர் திருமதி எஸ்.இந்திரகுமார், யாழ் சென் ஜோன் கல்லூரி அதிபர் பி.துசிகரன் ஆகியோர்களின் இணைந்த தலைமையில் இந்த போட்டி ஆரம்பமானது.
இரு அணிகளுக்கான நாணய சுழற்சி இடம்பெற்றது. அதில் யாழ். மத்திய கல்லூரி அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்த நிலையில், சென் ஜோன்ஸ் கல்லூரிக்கு களத்தடுப்பில் ஈடுபட்டது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்




