தெல்லிப்பளை வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சை ஆரம்பம்!

#SriLanka
Mayoorikka
2 months ago
தெல்லிப்பளை வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சை ஆரம்பம்!

இலங்கையின் வடக்கு பகுதியை வதிவிடமாக கொண்ட புற்றுநோயாளர்கள் சிகிச்சைக்காக கொழும்புக்கு சென்று மருத்துவ நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில், தற்போது தெல்லிப்பளை வைத்தியசாலையில் அதற்கான சிகிச்சை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 முன்னதாக சிகிச்சைக்கு சென்று வருகையில் தமது நலிவுத் தன்மை காரணமாகவும் அல்லது பிரயாணக் கஷ்டம் மற்றும் பணவசதிக் குறைவு காரணமாகவும் தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு சிகிச்சையைத் தொடர்வதற்காக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. 

 குறித்த விடயம் தொடர்பில் புற்றுநோயாளர்கள், மனித உரிமை ஆணைக்குழு மற்றும் சுகாதார அமைச்சு, வெகுஜன ஊடகங்களூடாகவும் முறைப்பாடுகளை முன்வைத்து கடந்த ஒரு வருடமாக தீர்வுக்காக காத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

 இதற்கமைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கொழும்பில் சிகிச்சை பெற்று வருகையில் நோயாளர்கள் தமது சிகிச்சையை யாழில் தொடர விரும்புமிடத்து தாம் பெற்ற சிகிச்சை தொடர்பான சகல விபரங்களையும் கடிதத்துடன் எடுத்து சென்று, தெல்லிப்பளையில் அங்கு உள்ள மருத்துவ மற்றும் கதிர்வீச்சு வசதிகளுடன் அங்கு சேவையாற்றும் புற்றுநோய் நிபுணர்களின் தீர்மானத்துடன் சிகிச்சை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

 மேலும் அவர்கள் எவ்வித காரணத்துக்காகவும் திருப்பி அனுப்பப் படமாட்டார்கள் எனவும் உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

images/content-image/1741284316.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!