கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு! சந்தேக நபர்களிற் தொடர்பில் நீதவான் பிறப்பித்துள்ள உத்தரவு
#SriLanka
Mayoorikka
10 months ago
கொழும்பு – புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்குள் இடம்பெற்ற கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 9 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர்கள் தொலை காணொளி மூலம் கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போதே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
சந்தேகநபர்களை நீதிமன்றத்திற்கு அழைத்துவரும்போது ஏற்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை கவனத்தில் கொண்டு காணொளி ஊடாக வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்
