ரணிலை கிளீன் போல்ட் செய்த அல் ஜசீரா நெறியாளர் யார் தெரியுமா?

யார் இந்த மெகதி ஷசன், நேற்றிலிருந்து இலங்கை முழுவதும் ஹீரோவாகவும் வில்லனாகவும் மாறி போன நபர். ஒரு சிலருக்கு இவர் புதிதாக இருக்கலாம் ஆனால் உலக அரசியலை அவதானிப்பவர்களுக்கு இவர் ஒரு சிம்ம சொப்பனம் தான்.
நேற்றைய பேட்டியில் ரணில் ஒரு இடத்தில் shout என்கிற வார்த்தையை மெகதி ஷசனை நோக்கி சொல்லுவார். காரணம் இவருடைய கேள்விகள் யாராக இருந்தாலும் அம்பை போல பாயும்.
இஸ்ரேல் -காசா , ரஷ்யா- உக்ரைன், விக்கிலீக்ஸ் என உலக அரசியலை மையமாக கொண்டவர்களை இவர் பேட்டி எடுத்துள்ளார். அல் ஜசீரா என்பது கட்டாரை தலைமையகமாக கொண்ட சர்வதேச தொலைகாட்சி ஒன்றாகும்,செனல் 4 போல இனி ரணில் ராஜபக்ச தரப்புக்கு அல் ஜசீரா இவர்கள் மீது காழ்ப்புணர்ச்சியோடு செய்திகள் சொல்லுகிறது என்று சர்வ சாதாரணமாக சொல்லுவார்கள்.
நேற்றைய உள்ளூர் பேட்டியில் ரணிலின் இனவாத கருத்து தெள்ளத்தெளிவாக விளங்ககியது. எங்கேயோ போய் அடிபட்டு தூர வந்து கத்தும் நாய் போல அங்கே அடிபட்டு இலங்கையில் வந்து மகாநாயக்கர்கள் பெரியவர்கள் எனும் கருத்தை ரணில் சொல்லியது, இன்னும் சிறுபிள்ளை போல எண்ணுவதாக உணர்கிறேன்.
ரணில் அனுபவமிக்க தலைவர், அரசியல் சாசனம் கரைத்து குடித்தவர் என்பது உண்மையே ஆனால் இலங்கைக்குள் மட்டுமே அவரின் சாணக்கியதனம் பலிக்கும். சாதாரணமாக 6 முறை பிரதமராகவும் 1 முறை ஜனாதிபதி பதவியில் இருந்து ஒருவருக்கு உள்ளூர் அரசியல்வாதிகளை சமாளித்து விடுவார்.
ஒன்று கல்வி அறிவு இல்லாத அரசியல்வாதிகள், இன்னொன்று லஞ்சம், இன்னொன்று அவர்களுடைய குற்றங்கள் அட்டவணைப்படுத்தி பயமுறுத்தல், என்று சொல்லி கொண்டே போகலாம்.
ரணில் நாட்டை காப்பாற்றினார் என்பது கட்டமைக்கப்பட்ட நாடகம், இலங்கையின் பொருளாதார, அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யப்பட்டால் போதும், உதாரணமாக இலங்கைக்கு ஒரு மாதம் சுற்றாலா பயணிகளும் ஒரு மாதம் ஏற்றுமதியும் சீராக இருந்தாலே பிரதான பிரச்சினைகள் தீரும்.
காரணம் இலங்கையின் புவியியல் அமைப்பு பிரதான காரணம் ஆகும். சர்வதேச அரங்கில் ரணில் பற்றி தெரிந்து இருந்தும் IMF முதற்கட்டமாக பணத்தை ரணில் கையில் எதற்காக வழங்கினார்கள் என்றால் அரசியல் ஸ்திரத்தன்மையை கொண்டு வந்தார்.
உதாரணமாக ஜப்பான் அரசாங்கம் ஊழல் லஞ்சம் காரணமாக உதவி திட்டங்களை நிறுத்தி இருந்தது, ஆனாலும் IMF கொடுத்ததுக்கான காரணம் உறுப்பு நாடுகளின் பொருளாதார ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு ஆகும்.
அது அவ்வாறு இருக்க நேற்று ரணில் Head to head நிகழ்சியில் பங்குபற்ற பிரதான காரணம், உலக அரங்கில் பலராலும் பார்க்கபடுகிற நிகழ்ச்சி , அடுத்த வருகிற பிரதேச சபை தேர்தலில் தேசிய மக்கள் சக்தி சிறிய பின்னடைவு சந்திக்க வாய்ப்பு உள்ளது, காரணம் பிரதான கட்டமைப்பு வேகத்தை மக்கள் ஏற்று கொள்ள நேரம் தேவைபடுகிறது.
ஆகவே அதை சாதமாக கொண்டு நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையின்மையை கொண்டுவந்து மீண்டும் அரகல போல ஒன்றை உருவாக்கும் திட்டத்தின் முதற் கட்டமாகும். தன் கதையாலும்,நகைச்சுவை பேச்சாலும் இலங்கை ஊடகவியலாளர்களை மயக்கியது போல மெகதி ஷசனை மயக்காலாம் என்று எதிர்பார்ப்போடு, ரணில் ராஜபக்ச கருத்தியலை விதைத்து சர்வதேச அரசியலை திசை திருப்பலாம் என்றே யோசித்து இருந்து இருப்பார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒரு சர்வதேச ஊடகத்திற்கு வழங்கி செவ்வியில் "do you think we are second class country" எனும் கவுண்டரை போட்டு செவ்வி எடுப்பவரை மடக்கியது போல பெரும் கனவோடு சென்றிருந்தார். ஆனால் பட்டலந்த அறிக்கை முதல் அவர்கள் வைத்திருப்பார்கள் என்று அவர் கனவிலும் நினைக்கவில்லை.
ஒரு சந்தர்ப்பத்தில் விடையளிக்க முடியாமல் அவருடைய கைகள் நடுங்க தொடங்கியது அவதானிக்க கூடியதாக இருந்தது. இலங்கை தேவாலயங்கள் தாக்குதல் சம்பந்தமான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் நகைச்சுவையாக அனுக முற்பட்ட ரணிலை " it's not a funny, they were killed 100 of people" என்று சொன்னதும் ரணில் நிலை தடுமாறி போனார்.
ரணிலுக்கு ஆதரவு வழங்க வந்த European parliament member ஒருவர் ரணிலால் சமாளிக்க முடிவில்லை என்று அறிந்தும் " you were bringing wrong person,and u should bring gottabaya rajagapaksha , because he destroyed ranil political " என்று சொன்னதும் உடனடியாக சுதாகரித்து கொண்ட மெகதி"எவ்வாறு இவருடைய அரசியல் வாழ்வை சிதைத்தவர் பிறந்தநாள் பார்ட்டியில் பாட்டுபாடினார் " என்றே கேட்டதும் ரணிலின் முகம் கோபத்தால் நிலை குழைந்து போனது.
ரணில் ஓநாய் என்பது அரசியலை அதிகமாக நோக்குகிறவர்களுக்கு தெரியும்.மகிந்தவுக்கு இணையான ஒரு இனவாதி தான் ஆனால் "slow position" என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.தேசிய மக்கள் சக்தி எதற்காக இவ்வளவு தடுமாறுகிறது என்றால் இலங்கையின் முழு system மும் மாற்ற வேண்டும். அதற்கு மிக நீண்ட காலம் தேவை.
இலங்கையின் முழு அரசியல் கட்டமைப்பு மக்களுக்கானது இல்லை, அது இலகுவான விடயமில்லை , வியாபார அரசியலை மக்கள் அரசியலாக மாற்ற வேண்டியதே தேசிய மக்கள் சக்தியின் நோக்கமாகும், அதில் அரைவாசி கடந்தும் விட்டார்கள். என்னதான் அரசியல் சாணக்கியனாக இருந்தாலும், சரியான இடத்தில் மூக்கு உடைப்படும் என்பதற்கு ரணில் சான்று!
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்



