ரயிலில் இருந்து தூக்கியெறியப்பட்ட சீன பெண் : கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்!
#SriLanka
#Accident
#Train
Thamilini
10 months ago
நானுஓயாவிலிருந்து பதுளை நோக்கி ஓடும் ரயிலில் பயணித்த வெளிநாட்டுப் பெண் ஒருவர், இன்று (09) காலை இடல்கஸ்ஹின்ன பிங்கே அருகே ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் படுகாயமடைந்தார்.lanka4.com
அவர் ஹப்புத்தளை பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக தியத்தலாவை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் பதுளை போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.lanka4.com
35 வயதான சீன பெண் ஒருவரே மேற்படி விபத்தில் சிக்கியுள்ளார். விபத்தில் காயமடைந்த பெண்ணின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.lanka4.com
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்
