எட்டு நாட்கள் பயணமாக சென்று 9 மாதங்களாக விண் வெளியில் தங்கியிருந்த பெண்! யாரிந்த சுனிதா வில்லியம்ஸ் (வீடியோ இணைப்பு)

#NASA
Mayoorikka
4 hours ago
எட்டு நாட்கள் பயணமாக சென்று 9 மாதங்களாக விண் வெளியில் தங்கியிருந்த பெண்! யாரிந்த சுனிதா வில்லியம்ஸ்   (வீடியோ இணைப்பு)

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு எட்டு நாள் பயணமாக சென்ற சுனிதா வில்லியம்ஸ் எதிர்பாராத நிகழ்வுகளால் சுமார் 9 மாதங்களுக்குப் பிறகு பூமிக்குத் திரும்ப தயாராகி வருகிறார்.

 சுனிதாவை மீட்க கடந்த சனிக்கிழமை அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி வீரர்கள் குழு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்பட்டனர்.

 இந்நிலையில், அவர்கள் இலங்கை இந்திய நேரப்படி மார்ச் 19-ஆம் திகதி அதிகாலையில் பூமிக்குத் திரும்பவுள்ளனர்.

 ஆம் யார் இந்த சுனிதா வில்லியம்ஸ்?

 சுனிதா லின் வில்லியம்ஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டாவது அமெரிக்க விண்வெளி வீரர். கல்பனா சாவ்லாவுக்கு அடுத்தபடியாக, சர்வதேச விண்வெளி நிலையத்தின் 'எக்ஸ்பெடிஷன் -14' குழுவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதாவை நாசா சேர்த்துக் கொண்டது.

 அவர் இரண்டு விண்வெளி பயணங்களில் 321 நாட்களுக்கு மேல் விண்வெளியில் செலவிட்டுள்ளார். அவர் ஏழு முறை விண்வெளி நடைப்பயணங்களை நடத்தியுள்ளார். இதன் மூலம், அதிகநேரம் விண்வெளி நடைபயணம் மேற்கொண்ட பெண் என்ற சாதனையையும் படைத்துள்ளார். 1965-ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் பிறந்தவர் சுனிதா. அவருடைய அப்பா தீபக் பாண்டியா, குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத்தை பூர்வீகமாகக் கொண்டவர். தீபக் பாண்டியா 1958-ஆம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறினார். சுனிதாவின் அம்மா போனி பாண்டியா. சுனிதாவின் கணவர் மைக்கேல் வில்லியம்ஸ். அவரும் ஒரு விமானியாக பணியாற்றியவர். தற்போது அவர் பொலிஸ் துறையில் பணியாற்றி வருகிறார். 

 1998-ஆம் ஆண்டு நாசா சுனிதாவை விண்வெளி வீரராக தேர்வு செய்தது. சுனிதா அமெரிக்க கடற்படை அகாடமியில் முதுகலைப் பட்டம் பெற்றவர். அவர் ஒரு திறமையான போர் விமானி என்று குறிப்பிடுகிறார் உள்ளூர் பத்திரிகையாளர் சலீம் ரிஸ்வி. 

 சுனிதா இதுவரை 30 வகையான விமானங்களை இயக்கியுள்ளார். அதில் அவர் 2700 மணி நேரம் பறந்த அனுபவத்தையும் பெற்றிருக்கிறார். படிப்பை முடித்த சுனிதா வில்லியம்ஸ் கடற்படையில் விமானியாக தன்னுடைய பணியை துவங்கினார். ​​ நாசாவில் பணிபுரியும் சுனிதா வில்லியம்ஸிற்கு அமெரிக்க அரசாங்கத்தின் தரநிலைப்படியே நாசாவிலும் சம்பளம் வழங்கப்படுகிறது. இதில் விண்வெளி வீரர்களுக்கான GS-13 மற்றும் GS-15 தர ஊதியமும் அடங்கும்.


 அமெரிக்காவில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் GS-01 முதல் GS-15 வரையிலான தர ஊதியத்தின்படி சம்பளம் வழங்கப்படுகிறது. GS-15 தர ஊதியம் என்பது இங்கு மிக அதிகமான சம்பளத்தை குறிக்கிறது. இந்த தரநிலைப்படியே சுனிதாவும் சம்பளம் பெறுகிறார். 

 விண்வெளி ஆராய்ச்சிக்காக சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோர் கடந்த ஆண்டு ஜூன் 5-ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றனர். 8 நாட்கள் ஆய்வு செய்துவிட்டு பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் ஸ்டார் லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு, இருவரும் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி ஸ்டார் லைனர் விண்கலம் ஆட்கள் இன்றி வெறுமையாக பூமிக்கு திரும்பியது. இதையடுத்து கடந்த சனிக்கிழமை நாசாவின் விண்வெளி வீரர்களில் ஒருகுழுவினர் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்பட்டனர். 

 அமெரிக்காவின் புளாரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட டிராகன் விண்கலம் கடந்த ஞாயிற்றுக் கிழமை சர்வதேச விண்வெளி நிலையத்தில் வெற்றிகரமாக இணைந்தது. பூமியில் இருந்து புதிதாக வந்த 4 விண்வெளி வீரர்களை, சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் சுனிதா உள்ளிட்ட 7 வீரர்களும் ஆரத் தழுவி வரவேற்றனர். 

அடுத்த சில நாட்களில் புதிய வீரர்களிடம் பணிகளை ஒப்படைத்துவிட்டு 4 வீரர்கள், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் பூமிக்கு திரும்ப உள்ளனர். இதுகுறித்து நாசா விண்வெளி அமைப்பு சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “மார்ச் 19-ம் தேதி ஐஎஸ்எஸ் நிலையத்தில் இருந்து டிராகன் விண்கலம் மூலம் அமெரிக்காவை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோர், நிக் ஹேக் மற்றும் ரஷ்யாவை சேர்ந்த அலெக்சாண்டர் ஆகியோர் பூமிக்கு திரும்ப உள்ளனர். என்று கூறியுள்ளது.

 இந்தநிலையில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 9 மாதங்களுக்கு மேலாக தங்கியிருக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் இதர வீரர்கள் பூமிக்கு திரும்பியதும் அவர்களுக்கு பல்வேறு உடல்நலக் குறைவுகள் ஏற்படும் எனவும் கூரப்பப்ட்டுள்ளது. விண்வெளியில் தங்கியிருந்ததால் அவர்களின் எலும்புகள், தசைநார்கள் பலவீனம் அடைந்திருக்கும். அவர்களின் தோல், குழந்தைகளின் தோல் போன்று மிகவும் மென்மையாக மாறியிருக்கும்.

 கண்பார்வை திறன் பாதிக்கப்பட்டு இருக்கும். கதிரியக்க பாதிப்பு காரணமாக செல்கள், ரத்த அணுக்களும் பாதிக்கப்பட்டிருக்கும். பூமிக்கு திரும்பியதும் அவர்களுக்கு தலைவலி, தலைசுற்றல், வாந்தி ஏற்படும். எலும்பு, தசைநார்கள் பலவீனம் அடைந்திருப்பதால் அவர்களால் தரையில் கால் ஊன்றி நடக்க முடியாது.

 சுமார் 3 மாதங்கள் முதல் ஓராண்டுக்கு பிறகே சுனிதா உள்ளிட்டோர் இயல்பு நிலைக்கு திரும்புவார்கள் என கூறப்பப்ட்டுள்ளது. விண்வெளியில் தங்கியிருந்த சுனிதா வில்லியம்ஸிற்கு நாசாவின் சம்பள பட்டியலில் ஜிஎஸ்-15 கிரேடில் வழங்கபப்டுகின்றது. 

 இதன்படி அவருக்கு ஓராண்டில் 1.41 கோடி ரூபா சம்பளம் வழங்கப்படுகிறது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் 9 மாதங்கள் தங்கிருந்ததற்காக 1.05 கோடி ரூபாவும் , இதர படிகள் வகையில் 1.06 கோடி ரூபாவும் அவருக்கு கிடைக்கும் என்று நாசா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை



images/content-image/1742299398.jpg
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!