இன்றைய ராசிபலன் (25.03.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன! (வீடியோ இணைப்பு)

#Astrology #Rasipalan #Todayrasipalan
Lanka4
6 days ago
இன்றைய ராசிபலன் (25.03.2025) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன! (வீடியோ இணைப்பு)

மேஷம்: 

அசுவினி: வியாபாரத்தில் முன்னேற்றம் காணும் நாள். புதிய வாடிக்கையாளர் வருகையால் லாபம் அதிகரிக்கும். பழைய கடன்களை அடைப்பீர்கள்.பரணி: உங்கள் முயற்சி வெற்றியாகும். வருமானத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். போட்டியாளர் விலகுவர். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.கார்த்திகை 1: உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்சினை முடிவிற்கு வரும். வராமல் இருந்த பணம் வரும். புதிய முயற்சி வெற்றியாகும்.

ரிஷபம்: 

கார்த்திகை 2,3,4: நன்மையான நாள். விஐபிகள் ஒத்துழைப்பால் உங்கள் வேலை நடந்தேறும். வியாபாரம் முன்னேற்றமடையும். ரோகிணி: மனதில் இருந்த குழப்பம் விலகும். அரசு வழியில் மேற்கொண்ட வேலைகள் நடந்தேறும். வருமானம் அதிகரிக்கும்.மிருகசீரிடம் 1,2: உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். உடன் பணிபுரிவோர் ஒத்துழைப்பால் நன்மை அடைவீர்.

மிதுனம்: 

மிருகசீரிடம் 3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் முயற்சியில் தடையும் தாமதமும் ஏற்படும். மனம் குழப்பமடையும்.திருவாதிரை: தேவையற்ற பிரச்சினைகள் தேடிவரும். பழைய பிரச்சினை ஒன்று மீண்டும் உங்களை நெருக்கடிக்கு ஆளாக்கும். பண நெருக்கடிக்கு ஆளாவீர்.புனர்பூசம் 1,2,3: வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். இயந்திரப் பணியில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நன்மையாகும். வாக்கு வாதங்களைத் தவிர்க்கவும்.


கடகம்: 

புனர்பூசம் 4: நன்மையான நாள். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகி மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத்துணை வழிகாட்டுதலுடன் உங்கள் செயலில் லாபம் காண்பீர்.பூசம்: நண்பர்கள் உதவியுடன் உங்கள் வேலைகளை நடத்தி முடிப்பீர். எதிர்பார்த்த வருமானம் வரும். கூட்டுத் தொழிலில் ஆதாயம் அதிகரிக்கும்.ஆயில்யம்: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வேலை இன்று முடிவிற்கு வரும். சிறு வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.

சிம்மம்: 

மகம்: ஆதாயமான நாள். திட்டமிட்ட செயல்களை இன்று நடத்தி முடிப்பீர். உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். உங்கள் செல்வாக்கு உயரும்.பூரம்: வியாபார போட்டியாளர்கள் விலகிச் செல்வர். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வருமானத்திற்குரிய முயற்சி வெற்றியாகும்.உத்திரம் 1: வெளி வட்டாரத்தில் உங்கள் ஆலோசனைக்கு வரவேற்பு இருக்கும். நீண்டநாள் பிரச்சினை முடிவிற்கு வரும். வியாபாரத்தில் லாபம் கூடும். வழக்கு சாதகமாகும்.

கன்னி: 

உத்திரம் 2,3,4: உங்கள் முயற்சி லாபமாகும் நாள். உயர்ந்த இடத்தில் இருப்பவரை சந்திப்பீர். எதிர்பார்ப்பு நிறைவேறும். ஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்படும்.அஸ்தம்: செய்துவரும் தொழிலில் இருந்த தடைகள் விலகும். முயற்சிக்கேற்ற ஆதாயம் காண்பீர். குடும்பத்தில் உண்டான நெருக்கடி விலகும்.சித்திரை 1,2: புதிய பொறுப்பு உங்களைத் தேடிவரும். அரசியலில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். விலகிச் சென்ற உறவுகள் தேடிவருவர்.

துலாம்: 

சித்திரை 3,4: மகிழ்ச்சியான நாள். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். சுவாதி: வேலைபளு அதிகரிக்கும் என்றாலும் திட்டமிட்ட வேலை நடந்தேறும். எதிர்பார்த்த பணம்வரும். விசாகம் 1,2,3: எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். சேமிப்பில் கவனம் செல்லும். புதிய முயற்சியில் ஈடுபட்டு லாபம் காண்பீர்.

விருச்சிகம்: 

விசாகம் 4: தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். வியாபாரத்தில் கவனமுடன் செயல்பட்டு லாபம் அடைவீர். பண நெருக்கடி தீரும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.அனுஷம்: நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.கேட்டை: உங்கள் செல்வாக்கு உயரும். முடியாமல் இருந்த வேலைகளை முடிப்பீர். அரசாங்க வழியில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். மனம் தெளிவடையும்.

தனுசு: 

மூலம்: விருப்பம் பூர்த்தியாகும் நாள். நீங்கள் மேற்கொண்ட செயலை செய்து முடித்து ஆதாயம் காண்பீர். வராது என்று நினைத்த பணம்வரும்.பூராடம்: வியாபாரத்தை விரிவு செய்வீர். நெருக்கடிகள் நீங்கும். உங்கள் விருப்பம் நிறைவேறும். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.உத்திராடம் 1: அனுசரித்துச் சென்று ஆதாயம் காண்பீர். தொழில் போட்டியாளர் விலகிச்செல்வர். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்.

மகரம்: 

உத்திராடம் 2,3,4: குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்பட வேண்டிய நாள். நண்பர்கள் ஆதரவுடன் நீண்டநாள் பிரச்சினைக்கு முடிவு காண்பீர். மனம் தெளிவடையும். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். திருவோணம்: தேவையற்ற சிந்தனைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டாம். திட்டமிட்ட செயல்கள் வெற்றியாகும். உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.அவிட்டம் 1,2: புதிய வாய்ப்பு உங்களைத் தேடிவரும். அதில் கவனமுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர். மனதில் நம்பிக்கை உண்டாகும்.

கும்பம்: 

அவிட்டம் 3,4: வரவு செலவில் கவனம் செலுத்த வேண்டிய நாள். அலைச்சல் அதிகரித்தாலும் முயற்சி வெற்றியாகும். தொலைந்துபோன பொருள் கிடைக்கும். விருப்பம் பூர்த்தியாகும்.சதயம்: நீங்கள் மேற்கொண்ட வேலையில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும்.பூரட்டாதி 1,2,3: திடீர் செலவுகள் ஏற்படும். தக்க சமயத்தில் நண்பர்கள் உதவி புரிவர். குடும்பத்தில் இருந்த சங்கடம் நீங்கும். இன்று யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.

மீனம்: 

பூரட்டாதி 4: யோகமான நாள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றி காண்பீர். வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும்.உத்திரட்டாதி: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். உங்கள் செல்வாக்கு உயரும். நினைத்தவை நடந்தேறும் என்றாலும் உடல்நிலையில் கவனம் செலுத்துவது அவசியம்.ரேவதி: எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். வழக்கு விவகாரம் சாதகமாகும். வரவேண்டிய பணம் வரும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் விலகும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!