பிரித்தானியாவில் சொகுசு கப்பலில் பயணித்த 60 வயது பயணி உயிரிழப்பு

#Death #Women #England #Ship
Prasu
1 year ago
பிரித்தானியாவில் சொகுசு கப்பலில் பயணித்த 60 வயது பயணி உயிரிழப்பு

சொகுசு கப்பலில் ஏற்பட்ட தகராறில் 60 வயது பயணி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சவுத்தாம்ப்டன் துறைமுகத்தில் இன்று காலை ஒரு சொகுசு கப்பலில் 60 வயது பயணி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து அவசரமாக கரைக்குத் திரும்பியது.

எம்.எஸ்.சி. விர்டுவோசா(MSC Virtuosa) என்ற அந்த கப்பல் இங்கிலாந்தை விட்டு புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, கரைக்கு மீண்டும் திரும்பியுள்ளது, கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் மே 3ஆம் திகதி சனிக்கிழமை இரவு 8:30 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பிரித்தானிய கடல் எல்லைக்குள் கப்பல் திரும்பியவுடன், பொலிஸார் விரைந்து கப்பலில் ஏறி எக்ஸிடரைச்(Exeter) சேர்ந்த 57 வயது நபரை கொலை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.

உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சிறப்பு பயிற்சி பெற்ற காவல்துறையினர் அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகின்றனர்.

இந்த உயிரிழப்புக்கு காரணமான தகராறு தொடர்பான முழு விவரங்களையும் கண்டறியும் விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1746554746.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4