லொறியுடன் கார் மோதியதில்: ஒருவர் உயிரிழப்பு: இருவர் படுகாயம்
#SriLanka
Mayoorikka
2 months ago
மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று அதிகாலை 04.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கார் ஒன்று முன்னால் பயணித்துக்கொண்டிந்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக குருணாகல் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
காரின் சாரதி உறங்கியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(வீடியோ இங்கே )
அனுசரணை
