விஜய்யின் சாதனையை முறியடித்த சிவகார்த்திகேயன்
ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ம் திகதி உலகமெங்கும் வெளியாக உள்ளது.
இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் டிரெய்லர் சில நாள்களுக்கு முன் வெளியாகி யூடியூபில் 40 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
அதேநேரம், சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் பராசக்தி. டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் படத்தை தயாரித்துள்ளார்.
இப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.10ம் திகதி வெளியாக உள்ளது.
ஜனநாயகன் டிரெய்லருக்கு பின் வெளியான சிவகார்த்திகேயனின் பராசக்தி டிரெய்லர் இதுவரை எந்த தமிழ் சினிமாவும் செய்யாத சாதனையாக 47 மில்லியன் பார்வைகளைப் பெற்று ஜன நாயகனைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது.
(வீடியோ இங்கே )