இலங்கைக்கு மீண்டும் பாதிப்பு விடுக்கப்பட்ட எச்சரிக்கை (வீடியோ இணைப்பு)
#SriLanka
#weather
#Rain
Mayoorikka
1 day ago
இலங்கைக்கு தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்திற்குள் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, மேற்கு-வடமேற்கு நோக்கி நகரும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
இந்த அமைப்பின் வளர்ச்சியுடன், நாடு முழுவதும் - குறிப்பாக வடக்கு, வட-மத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் - ஜனவரி 8 முதல் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஊவா மாகாணத்தின் சில பகுதிகளிலும், நுவரெலியா, மாத்தளை, பொலன்னறுவை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சுமார் 100 மி.மீ. வரை பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.