பொத்துவில் நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை!
#SriLanka
#weather
#Rain
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
23 hours ago
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை நாளைய தினம் ஹம்பாந்தோட்டை மற்றும் கல்முனை நோக்கி நகரும் என வானிலை ஆய்வுத் துறையின் இயக்குநர் ஜெனரல் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாதகமான வானிலை குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், பொத்துவில் பகுதியிலிருந்து தென்கிழக்கே சுமார் 350 கிலோமீட்டர் தொலைவில் காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலைக்கொண்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, மீன்பிடி மற்றும் கடற்படை சமூகத்தினர் கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
“இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்”