சட்டவிரோதமாக போலந்திற்கு குடிப்பெயர திட்டமிட்ட நால்வர் கைது!
சட்டவிரோதமாக போலந்தில் குடிப்பெயர திட்டமிட்ட நான்கு இலங்கையர்கள் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நால்வரும் மேற்படி போலந்திற்கு குடிப்பெயர போலி விசாக்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்தியா செல்ல முற்பட்டபோது கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பைச் சேர்ந்த 22 வயதுடைய திருமணமான தம்பதியர், வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 28 வயதுடைய நபர் மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 45 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போலந்துக்கு சட்டப்பூர்வமாக பயணிக்க விசாக்களைப் பெறுவதற்காக அந்த நபர்கள் தரகர்களுக்கு 6.4 மில்லியன் ரூபாய்களை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும் குறித்த விசாக்கள் போலியானது எனவும், இது சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தெரியாது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
“இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்”