தாரணி சுப்பர் மார்கெட் சிறீதரனுடையது அல்ல! ஆதாரம் உள்ளே.
சிறீதரன் தனது வருமானத்திற்கு அப்பாற்பட்ட வகையில் சட்டவிரோதமாகச் சொத்துக்களைக் குவித்துள்ளதாகக் கூறி, சிவில் அமைப்பு ஒன்றின் செயற்பாட்டாளரான சஞ்ஜய மஹவத்த என்பவர் கடந்த 2025 ஜூலை 24 அன்று நிதி குற்றப்புலனாய்வு பிரிவிடம் முறைப்பாடு செய்திருந்தார்.
அந்த முறைப்பாட்டில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களில் தாரணி சுப்பர் மார்கெட் என்ற பெயரில் இயங்குகின்ற வணிக நிறுவனங்களும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்குச் சொந்தமானது என குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் கிளிநொச்சியில் இயங்குகின்ற தாரணி சுப்பர் மார்கெட் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்குச் சொந்தமானது என்பதற்கு இதுவரை ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. மாறாக அது பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் சகோதரன் சிவஞானம் ஸ்ரீகுகன் என்வரே கிளிநொச்சியில் இயங்குகின்ற தாரணி சுப்பர் மார்கெட் கட்டடத்தை 12 இலட்சம் ரூபா முற்பணம் செலுத்தி மாதாந்தம் 90 ஆயிரம் ரூபா குத்தகைக்கு பெற்றிருகின்றார்.

இதற்கு சாட்சியாக பாராளுமன்ற உறுப்பினரின் மகன் சிறிதரன் சாரங்கன் ஒப்பம் இட்டுள்ளார். குறித்த கட்டடம் கனடாவை சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமானது. அவர் கிளிநொச்சியில் உள்ள ஒருவருககு அற்றோனிப் பவர் வழங்கியுள்ளார்.
(நன்றி தமிழ் செல்வன்.)
“இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்”