காசாவுக்குள் உதவிகளை அனுமதிக்க வலியுறுத்திய ஹாலிவுட் நடிகை ஆஞ்சலினா ஜோலி
காசா பகுதியில் தொடரும் போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க, பிரபல ஹாலிவுட் நடிகை ஆஞ்சலினா ஜோலி ரஃபா எல்லைப் பகுதிக்கு நேரில் சென்றுள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் காசாவுக்கு நிவாரணம் வழங்கி வந்த 37 குழுக்களுக்கு இஸ்ரேல் தடை விதித்தது.
எல்லையில் ஆயிரக்கணக்கான லாரிகள் உணவு மற்றும் மருந்துகளுடன் காத்துக்கொண்டிருக்கும் நிலையில் அவை காசாவுக்குள் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐநாவின் அகதிகள் தூதராக நீண்ட காலம் பணியாற்றிய ஆஞ்சலினா ஜோலி, ரஃபா எல்லைக்கு நேரில் சென்று அங்குள்ள அகதிகள் முகாம்களைப் பார்வையிட்டார்.
அப்போது, "இங்கு நடப்பது மனிதாபிமானத்திற்கு எதிரானது. பசியாலும் போரினாலும் வாடும் குழந்தைகளுக்கு உடனடியாக உதவி கிடைக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.
இது போர்க்குற்றத்திற்குச் சமமானது. போரை விடப் பசியினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஒரு நாகரிகச் சமூகத்தின் மிகப்பெரிய தோல்வி" என்று இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே )