கடந்த வருட இறுதியில் இலங்கையின் கையிருப்பு அதிகரிப்பு!
#SriLanka
#Dollar
Mayoorikka
1 day ago
கடந்த 2025 டிசம்பர் மாத இறுதியில் இலங்கையின் உத்தியோகப்பூர்வ மொத்த கையிருப்பு 6,825 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய தரவுகளின் அடிப்படையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. இது 2025 நவம்பர் மாத இறுதியில் பதிவான 6,034 மில்லியன் டொலர் கையிருப்புடன் ஒப்பிடுகையில் 13.1% அதிகரிப்பாகும்.
அதேவேளை, உத்தியோகபூர்வ கையிருப்பின் முக்கிய அங்கமான அந்நிய செலாவணி கையிருப்பு, 2025 நவம்பர் மாதத்தில் காணப்பட்ட 5,944 மில்லியன் டொலர்களிலிருந்து, கடந்த டிசம்பர் மாதத்தில் 6,734 மில்லியன் டொலர்கள் வரை 13.3% இனால் அதிகரித்துள்ளது.
“இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்”