புகையிலை மற்றும் சிகரெட் பயன்பாட்டால் ஆண்டிற்கு 22 ஆயிரம் பேர் உயிரிழப்பு!
#SriLanka
#Ciggerette
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
23 hours ago
புகையிலை மற்றும் சிகரெட் பயன்பாடு காரணமாக இலங்கையில் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 22,000 இறப்புகள் பதிவாகுவதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது.
நாட்டில் ஏற்படும் அனைத்து இறப்புகளிலும் 83% தொற்று அல்லாத நோய்களால் ஏற்படுவதாகவும், இந்த இறப்புகளுக்கு பங்களிக்கும் நான்கு முக்கிய ஆபத்து காரணிகளில் புகையிலை பயன்பாடு ஒன்று எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டில் சுமார் 1.5 மில்லியன் பெரியவர்கள் புகைபிடிப்பிற்கு அடிமையானவர்கள் என்றும் அது மேலும் கூறப்பட்டுள்ளது.
புகையிலை மற்றும் மது தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் டாக்டர் ஆனந்த ரத்நாயக்க, உலகளவில் ஒவ்வொரு ஆறு வினாடிக்கும் ஒருவர் புகையிலை பயன்பாட்டினால் உயிரிழப்பதாக தெரிவித்துள்ளார்.
“இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்”