கிரீன்லாந்து தங்கத்தை விட விலை மதிப்பில்லா உலகின் பொக்கிஷம். அமெரிக்க அதிபர் டிரம்ப் விரும்புவது ஏன்

#America #world_news #Trump
Mayoorikka
17 hours ago
கிரீன்லாந்து தங்கத்தை விட விலை மதிப்பில்லா உலகின் பொக்கிஷம். அமெரிக்க அதிபர் டிரம்ப் விரும்புவது ஏன்

கிரீன்லாந்தில் இருப்பது தங்கத்தை விட விலை மதிக்க முடியாத சொத்து.. இந்தியாவில் மூன்றில் இரண்டு பங்கு நிலம்.. 16 தமிழ்நாட்டை உள்ளே வைக்கலாம்.. அவ்வளவு பெரிய தீவில் வெறும் 57000 பேர் தான் மக்கள் தொகை.. 

அங்குள்ள பாதி நிலம் பனிக்கட்டியால் உறைந்துள்ளது. அந்த பனிக்கட்டிகள் தற்போது காலநிலை மாற்றத்தால் கரைந்து வருகிறது.

இதனால் கப்பல்கள் எளிதாக வந்து போகும் நிலை உருவாகி உள்ளது. இதனால் பயணமும் அமெரிக்காவிற்கு குறைந்துள்ளது. அங்குள்ள அரிய வளங்களை சீனா அனுபவித்து வருகிறது. இது தான் அமெரிக்க அதிபர் டிரம்ப் அதனை கட்டுப்பாட்டில் எடுக்க விரும்ப காரணமாக உள்ளது. வெனிசுலாவில் கைவைத்த சுவடு கூட மறையவில்லை..

 அடுத்தகட்டமாக அமெரிக்காவின் கண் டென்மார்க் நாட்டிற்கு சொந்தமான கிரீன்லாந்து பக்கம் திரும்பி உள்ளார். அமெரிக்காவுக்கு டென்மார்க்கின் கட்டுப்பாட்டில் உள்ள கிரீன்லாந்து தீவு தேவை என்று அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். 

அந்த தீவு இந்தியாவில் மூன்றில் இரண்டு பங்கு இருந்தாலும் மக்கள் தொகை வெறும் 57000த்தான், தன்னாட்சி பிரதேசம் என்றாலும், அந்த மொத்த தீவையும் டென்மார்க்கிடம் விலைக்கு வாங்க தயாராக உள்ளதாக டிரம்ப் அறிவித்தார்.

 டென்மார்க் பிரதமர் மறுப்பு ஆனால் விலைக்கு விற்பனை இல்லை என்று டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் என்றோ கூறிவிட்டார். 

ஆனால் காலநிலை மாற்றத்தால், அங்குள்ள இயற்கை பொக்கிஷங்கள் வெளியே வர தொடங்கியது. அதேபோல் பனிக்கட்டி கரைந்து வருவதால் சூயஸ் கல்வாயை சுற்றிச்செல்ல தேவையில்லை என்கிற அளவிற்கு அமெரிக்காவிற்கு கப்பல் போக்குவரத்து அணுகூலமாக மாறி வருகிறது. இது அமெரிக்காவிற்கு மிகப்பெரிய நன்மையாக பார்க்கப்படுகிறது. 

ஆனால் சீனாவும், ரஷ்யாவும் கிரீன்லாந்து மீது கண் வைத்துள்ளன. இதுபற்றி சற்று விரிவாகவே பார்ப்போம். அரசியல்வாதிகள் நில அபகரிப்பு மாடல் இதுபற்றி பார்க்கும் முன்பு நம்மூர் பெரிய அரசியல்வாதிகளிடம் இருந்து ஆரம்பிப்போம். நம்மூரில் பெரிய அரசியல்வாதிகள் கோடிக்கணக்கில் கொள்ளையடித்து பினாமிகள் பெயரில் சொத்து வைத்திருப்பார்கள். 

அவர்களுக்கு எங்கு சாலைகள் வரும், எங்கு பேருந்துநிலையம் வரும் , எந்த நிலத்தின் மதிப்பு உயரப்போகிறது என்று முன்பே தெரியும். 

அதனை உணர்ந்து அடிமாட்டு விலைக்கு அடித்து பேசி, எளியவர்களிடம் வேறு ஒருவரை முதலில் வாங்க வைப்பார்கள்.. பின்னர் அவர்களிடம் இருந்து இவர்கள் வாங்கி கொள்வார்கள். அல்லது இவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு விற்க வைப்பார்கள். அதன்பின்னர் நிலத்தின் மதிப்பு பெரிய அளவில் உயர்ந்துவிடும். 

சாமானிய மக்கள் ஏமாந்து போவார்கள். விற்றே ஆக வேண்டும் அதேபோல் சில இடங்களில் அரிய வகை நிலமாக இருக்கும். அந்த நிலத்தை பணக்காரர் ஏழையிடம் கட்டாயம் விற்குமாறு கேட்பார். விற்க மறுத்தால் அடித்து பிடுங்கிவிடுவார். கிட்டத்தட்ட அப்படித்தான் உலகின் நாட்டாமை அல்லது உலக போலீஸாக கருதும் அமெரிக்கா, தன் நாட்டின் பாதுகாப்பிற்கோ அல்லது பொருளாதாரத்திற்கோ சிறு அச்சுறுத்தல் வந்தாலும், அந்த இடத்தில் தன் ஆதிக்கத்தைச் செலுத்த விரும்புவது அதன் வழக்கம் ஆகும்.

 புதையல் பெட்டி கிரீன்லாந்தில் மக்கள் வசிக்க இடமில்லை என்றாலும், அதன் 80% பரப்பு பனிக்கட்டியால் மூடப்பட்டுள்ளது. அந்தப் பனிக்கு அடியில் தான் தங்கம், வைரம் மற்றும் நான் ஏற்கனவே சொன்ன "Rare Earth" தாதுக்கள் கொட்டிக்கிடக்கின்றன. 

இது கிட்டத்தட்ட ஒரு "மறைந்துள்ள புதையல் பெட்டி" போன்றது. உலகமே விரும்பும் உதாரணமாக, மின்சார கார்கள் மற்றும் காற்றாலைகளை உருவாக்குவதற்கு தேவையான எண்ணெய், எரிவாயு மற்றும் அரிய மண் தாதுக்கள் உள்ளன. தற்போது,​​இந்த முக்கியமான கனிமங்களில் சீனா கிட்டத்தட்ட உலகளாவிய ஏகபோகத்தைக் கொண்டிருக்கிறது. 

தீவின் சுமார் 80% பகுதி அடர்த்தியான பனிக்கட்டியால் மூடப்பட்டுள்ளது, ஆனால் காலநிலை மாற்றத்தின் விளைவாக தற்போது பனி பின்வாங்கி வருகிறது, இதனால் பாதைகளை எளிதாக அணுக முடியும். இருப்பினும், கிரீன்லாந்து அரசாங்கம் இதுவரை சுற்றுச்சூழல் காரணங்களுக்காக சுரங்கத்தைத் தடுத்து வருகிறது. எளிதான பயணம் அதிகரித்து வரும் வெப்பநிலை மற்றும் பனிக்கட்டிகள் குறைந்து வருவதால், கிரீன்லாந்தைச் சுற்றியுள்ள நீரில் கப்பல்கள் எளிதாக பயணிக்க முடியும்.

 இதனால் ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையிலான பயணம் சூயஸ் கால்வாய் வழியாக செல்லும் பயணத்தை விட மிகக் குறைவு ஆகும். அமெரிக்காவின் ஆதிக்கம் வணிகக் கப்பல்களுக்குப் பொருந்தும் விஷயங்கள் ரஷ்ய போர்க்கப்பல்கள் மற்றும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களுக்கும் பொருந்தும். ரஷ்யாவும் சீனாவும் ஆர்க்டிக்கில் தங்கள் செல்வாக்கை விரிவுபடுத்த முயற்சித்து காய்நகர்த்தி வருகின்றன. 

அமெரிக்கா பல ஆண்டுகளாகவே கிரீன்லாந்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 1940 ஆம் ஆண்டு நாஜி ஜெர்மனி டென்மார்க்கை ஆக்கிரமித்தபோது,​​ஜெர்மன் படையெடுப்பைத் தடுக்க அமெரிக்கப் படைகள் அப்போதைய டென்மார்க் காலனியில் தரையிறங்கின. டென்மார்க் தர மறுப்பு அமெரிக்க ஜனாதிபதி ஹாரி ட்ரூமன் 1946 ஆம் ஆண்டு கிரீன்லாந்தை $100 மில்லியன் தங்கத்திற்கு வாங்க முன்வந்தார். டென்மார்க் மறுத்துவிட்டது, ஆனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு நிரந்தர அமெரிக்க இராணுவ இருப்புக்கு ஒப்புக்கொண்டது. 

இது நேட்டோவின் பனிப்போர் பாதுகாப்பு உத்தியின் ஒரு பகுதியாக மாறியிருக்கிறது. ராணுவ தளம் இப்போது பிட்டுஃபிக் ஸ்பேஸ் பேஸ் என்று அழைக்கப்படும் இராணுவத் தளம் பெரிதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது மற்றும் ஏவுகணைகளுக்கான ஆரம்ப எச்சரிக்கை அமைப்பைக் கொண்டுள்ளது - ஏனெனில் ஐரோப்பாவிலிருந்து வட அமெரிக்காவிற்கு குறுகிய பாதை கிரீன்லாந்து வழியாகும். இதனால் தான் டென்மார்க்கை வாங்க அமெரிக்கா இன்று வரை விரும்புகிறது. அமெரிக்காவின் திட்டம் அதேநேரம் நேரடியாகச் சண்டையிடாமல் அல்லது வாங்க முயற்சிக்காமல், இது நாள் வரை அமெரிக்கா வேறு வழியில் காய்களை நகர்த்தி வந்தது.

 அங்குப் புதிய தூதரகத்தைத் திறந்தது. சுரங்கத் தொழில் மற்றும் சுற்றுலாவிற்குப் பல கோடி டாலர்களை நிதியாக அளித்து வருகிறது. இதன் மூலம் கிரீன்லாந்து மக்கள் டென்மார்க்கை விட அமெரிக்காவையே அதிகம் நம்பியிருக்கும் சூழலை உருவாக்கி வைத்துள்ளது. கிரீன்லாந்து மக்கள் அமெரிக்காவை மனப்பூர்வமாக ஏற்க வைக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்து வைத்துள்ளது. தனி நாடாக மாறும் எனினும் கிரீன்லாந்து மக்களோ, டென்மார்க்கும் வேண்டாம், அமெரிக்காவும் வேண்டாம் என்கிற மனநிலையில் தான் இருக்கிறார். 

அந்நாட்டின் தன்னாட்சி பிரதேச பிரதமரும் இதே கருத்தை தான் கூறி வருகிறார். ஆனால் உலக நாடுகள் அவ்வளவு எளிதாக பொக்கிஷத்தை விடுமா.. அதனால் தான் அது தற்போது போர்க்களமாக மாறும் அபாயத்தில் உள்ளது.

 டென்மார்க் தாக்கும் அமெரிக்கா கிரீன்லாந்தில் எந்த நகர்வு செய்தாலும். உடனே அமெரிக்காவிற்கு எதிராக டென்மார்க் தாக்க தயாராக இருக்கிறது. போர் அபாயம் அதிகமாக உள்ளது. ஒருவேளை டென்மார்க், ரஷ்யா, சீனாவிடம் ஆதரவு கேட்டால், அது அமெரிக்காவிற்கு பெரிய பின்னடைவாக மாறும். ஏனெனில் ரஷ்யாவின் ஏவுகளை அமெரிக்காவை தாக்காமல் தடுக்கும் இடமே கிரீன்லாந்து தான். அமெரிக்காவின் தற்கொலைக்கு சமம் அதேபோல் சீனா ஏற்கனவே கிரீன்லாந்தில் முதலீடு செய்ய மிக ஆர்வமாக உள்ளது. 

அப்படி மட்டும் நடந்தால் அமெரிக்காவின் கொள்ளை புறத்திலேயே சீனா உட்கார்ந்துவிடும் அளவுக்கு அமெரிக்ககாவிற்கு ஆபத்தானது. கிரீன்லாந்து என்பது உலக அதிகாரத்தை நிர்ணயிக்கும் ஒரு செஸ் போர்டு. அங்கு ஒரு காயைத் தவறாக நகர்த்தினாலும் அமெரிக்காவின் "உலக வல்லரசு" அந்தஸ்திற்குப் பெரிய ஆபத்து வரும். அந்த முடிவு அமெரிக்காவின் தற்கொலைக்கு சமம் என்கிறார்கள் சர்வதேச நிபுணர்கள்

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!