சைபர் குற்றங்களை எதிர்த்துப் போராட அரசாங்கம் வகுத்துள்ள புதிய திட்டம்!

#SriLanka #cyber crime
Thamilini
4 hours ago
சைபர் குற்றங்களை எதிர்த்துப் போராட அரசாங்கம் வகுத்துள்ள புதிய திட்டம்!

இலங்கையில் சைபர் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்காக ஒரு புதிய காவல் பிரிவை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். 

பொல்பிட்டிய காவல் நிலைய திறப்பு விழாவில் பங்கேற்றபோது அமைச்சர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார். 

 இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  தினமும் 23 முதல் 25 வரை சைபர் குற்றங்கள் பதிவாகின்றன என்றும், இது குறிப்பிடத்தக்க அளவு அதிக எண்ணிக்கையில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

 இதுபோன்ற குற்றங்களை திறம்பட விசாரித்து தீர்ப்பதற்குத் தேவையான புதிய தொழில்நுட்பம், சிறப்பு அறிவு மற்றும் காவல் துறையின் நவீனமயமாக்கல் ஆகியவை முறையாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

 இலங்கை காவல்துறையை திறமையான, தொழில்முறை மற்றும் ஊழல் இல்லாத நிறுவனமாக உருவாக்குவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் இந்த இலக்கை அடைவதற்கு தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். 

திறமையான அதிகாரிகள் முன்னேறுவதற்கு உகந்த சூழல் உருவாக்கப்பட்டு வருவதாகவும், தவறான நடத்தைகளில் ஈடுபடும் அதிகாரிகளை காவல் சேவையிலிருந்து நீக்குவதற்கான வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!