அமெரிக்க ஜனாதிபதியின் விடுதிக்குள் நுழைய முயன்ற நபர் சுட்டுக்கொலை

#Death #America #GunShoot #Trump
Prasu
2 hours ago
அமெரிக்க ஜனாதிபதியின் விடுதிக்குள் நுழைய முயன்ற நபர் சுட்டுக்கொலை

அமெரிக்க ஜனாதிபதிடொனால்ட் டிரம்பிற்குச் சொந்தமான புளோரிடாவில் உள்ள மார்-ஏ-லாகோ சொகுசு விடுதிக்குள் அத்துமீறி நுழைய முயன்ற ஆயுதம் ஏந்திய நபர் ஒருவரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.

புளோரிடாவின் பாம் பீச்சில் உள்ள இந்த விடுதியில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கையில் துப்பாக்கி மற்றும் பெட்ரோல் குண்டு எடுத்துச்சென்றதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து ரகசிய சேவை அதிகாரிகள் மற்றும் பாம் பீச் கவுண்டி ஷெரிஃப் துணை அதிகாரி ஆகியோர் இளைஞர்மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அவர் உயிரிழந்தார்.

உயிரிழந்த இளைஞர் வட கரோலினாவைச் சேர்ந்தவர் என்றும் சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் புகார் அளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் போது ஜனாதிபதி டிரம்ப் மற்றும் மனைவி மெலனியா ஆகியோர் விடுதியில் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!