இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் ஏவுகணை மழை: டெல் அவிவில் பாரிய வெடிப்புகள் - 8 பேர் காயம்

#America #world_news #Israel #Iran #Breakingnews #ADDA #ADDAADS #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #IranVsIsrael
Lakhi
3 hours ago
இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் ஏவுகணை மழை: டெல் அவிவில் பாரிய வெடிப்புகள் - 8 பேர் காயம்

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய பாரிய வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரான் மீண்டும் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடுத்துள்ளது.

இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டுள்ள அவசர அறிவிப்பின்படி, ஈரான் தரப்பிலிருந்து இஸ்ரேலை இலக்கு வைத்து மேலும் பல ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன. வான் பாதுகாப்புப் படையினர் அவற்றை எதிர்கொண்டு வருகின்றனர்.

இஸ்ரேலின் முக்கிய நகரமான டெல் அவிவின் குஷ் டான் எனும் பெருநகரப் பகுதியில் பல ஏவுகணைகள் விழுந்து வெடித்துள்ளன. இந்த வெடிப்புச் சம்பவங்களில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார், மேலும் எழுவர் சிறிய காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர் என இஸ்ரேலின் சனல் 12 செய்தி வெளியிட்டுள்ளது. பல கட்டிடங்கள் மற்றும் வாகனங்கள் வெடிப்புகளினால் சேதமடைந்துள்ளன.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!