பொருளாதாரக் கண்காணிப்புக் குழு: அவசர ஆலோசனை!

#Economic #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4
Abi
3 hours ago
பொருளாதாரக் கண்காணிப்புக் குழு: அவசர ஆலோசனை!

சர்வதேச ரீதியில் நிலவும் பொருளாதார சவால்கள் மற்றும் வெளிப்புற அழுத்தங்களுக்கு மத்தியில், இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கவும் பொதுமக்களின் நலனை உறுதிப்படுத்தவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்ட 'பொருளாதார கண்காணிப்புக் குழு' நேற்று (10) மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது.

நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சரும், தொழிலாளர் அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. இக்குழுவின் செயலாளராகவும் அழைப்பாளராகவும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் (நிதி மற்றும் பொருளாதாரம்) ரஸல் அபோன்சு செயற்படுகிறார்.

இந்த முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி பி.நந்தலால் வீரசிங்க, திறைசேரி செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஹான்ஸ் விஜயசூரிய, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹூலன்கமுவ ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம், லிட்ரோ எரிவாயு, துறைமுக அதிகாரசபை, ஏற்றுமதி அபிவிருத்தி சபை, தேயிலை சபை ஆகியவற்றின் தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய அமைச்சுகளின் செயலாளர்களும் கலந்து கொண்டனர்.

தற்போது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள பொருளாதார ஸ்திரமற்ற தன்மையினால் இலங்கை பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

குறிப்பாக, உலகளாவிய பொருளாதார அதிர்ச்சிகளுக்கு மத்தியில் உள்நாட்டு சந்தையைப் பாதுகாத்தல் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தை உறுதி செய்தல்.

மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களிடமிருந்து கிடைக்கும் வெளிநாட்டு பணப் பரிமாற்றங்களை பாதிக்கப்படாமல் பாதுகாத்தல்.

எரிபொருள் இறக்குமதி மற்றும் அதன் விலைகளில் ஏற்படக்கூடிய மாற்றங்களை முகாமைத்துவம் செய்தல். வணிகம் மற்றும் முதலீடு: மத்திய கிழக்கு பிராந்தியத்துடன் கொண்டுள்ள வணிக மற்றும் முதலீட்டுத் தொடர்புகளுக்கு ஏற்படக்கூடிய சவால்களை முறியடித்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.

5 இலங்கை ஒரு சிறிய திறந்த பொருளாதாரத்தைக் கொண்ட நாடு என்பதால், இவ்வாறான வெளிப்புற அதிர்ச்சிகளால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து, தேவையான கொள்கை ரீதியான தீர்மானங்களை உடனுக்குடன் எடுப்பதற்கு இக்குழு தீர்மானித்துள்ளது.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!