உடலை ஈரப்பதமாக வைத்துக் கொள்ளுங்கள்.! பொது மக்களுக்கு எச்சரிக்கை!!

#SriLanka #Body #Warning #Public #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4
Abi
2 hours ago
உடலை ஈரப்பதமாக வைத்துக் கொள்ளுங்கள்.! பொது மக்களுக்கு எச்சரிக்கை!!

நாட்டில் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் வெப்ப அழுத்தத்தால் பாதிக்கப்படும் அபாயம் அதிகரிக்கக்கூடும் என சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கை சுகாதார அமைச்சு சார்பில் நேற்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், பொதுமக்கள் அதிகமாக நீர் மற்றும் பொருத்தமான திரவ ஆகாரங்களை அருந்தி உடலை ஈரப்பதமாக வைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இந்த சந்திப்பில் அதுல லியனபத்திரண, ருவன் ஜயசூரிய மற்றும் சன்ன டி சில்வா ஆகிய மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டு வெப்பநிலை அதிகரிப்பால் ஏற்படும் சுகாதார பாதிப்புகள் குறித்து விளக்கமளித்தனர்.

இதற்கிடையில் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட தகவலின்படி, இன்று மேல், சபரகமுவ, தென், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களுடன் மொனராகலை, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் வெப்பச் சுட்டெண் உயர் மட்டத்தில் காணப்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் தேவையற்ற நேரங்களில் வெளியில் செல்லாமல் கவனம் செலுத்துமாறும் சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!