மின்சாரத் தடை குறித்த வதந்திகள்: அமைச்சின் தீர்க்கமான பதில்.

#SriLanka #power cuts #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4
Abi
14 hours ago
மின்சாரத் தடை குறித்த வதந்திகள்: அமைச்சின் தீர்க்கமான பதில்.

நாட்டில் மின்சார விநியோகத்தைத் தடையின்றி முன்னெடுப்பதில் தற்போதைக்கு எந்தச் சிக்கலும் இல்லை என வலுசக்தி அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

நீர்மின் உற்பத்தி மற்றும் நிலக்கரி இறக்குமதியில் சவால்கள் நிலவுவதாகக் கூறப்படும் பின்னணியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது குறித்து வலுசக்தி பிரதி அமைச்சர் அர்க்கம் இல்யாஸ் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், நீர்மின் உற்பத்திக்குத் தேவையான மழைவீழ்ச்சி குறையக்கூடும் என வானிலை அவதானிப்பு நிலையம் எச்சரித்துள்ள போதிலும், தற்போது மின்சார விநியோகத்தில் பாதிப்புகள் எதுவும் அடையாளம் காணப்படவில்லை. 

எரிசக்தி வளங்களை வினைத்திறனாக விநியோகிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. நிலக்கரி கப்பல்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகளை நிராகரித்த பிரதி அமைச்சர், கப்பல்கள் ஏற்கனவே இலங்கையை நோக்கி வந்து கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.

சில கப்பல்களுக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் மின் விநியோகத்தைப் பாதிக்காது என அவர் மேலும் தெரிவித்தார். வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க, நாடு தற்போது வறட்சியான காலநிலையை எதிர்கொண்டுள்ளதாக எச்சரித்துள்ளார்.

இது நீர்மின் உற்பத்தித் திறனைக் குறைக்கக்கூடும் என்ற கவலை பொதுமக்களிடையே எழுந்துள்ளது. அமைச்சின் இந்த உறுதிமொழிகளுக்கு மத்தியிலும், தரம் குறைந்த நிலக்கரி பயன்பாடு மற்றும் நிலக்கரி கையிருப்புக் குறைவு காரணமாக எதிர்காலத்தில் மின்வெட்டு ஏற்படக்கூடும் என மின்சாரத் துறை தொழிற்சங்கங்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வியெழுப்பி வருகின்றன.

இருப்பினும், எரிபொருள் விநியோகத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கியூ.ஆர். முறைமை போன்றே, வலுசக்தி வளங்களையும் முறையாக முகாமைத்துவம் செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!