தெதுரு ஓயா மற்றம் இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான்கதவுள் திறப்பு!

#SriLanka #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 month ago
தெதுரு ஓயா மற்றம் இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான்கதவுள் திறப்பு!

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகளும் இன்று திறக்கப்பட்டுள்ளன. 

இது தொடர்பில் நீர்பாசன திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  வான்கதவுகள் திறக்கப்பட்டதன் மூலம் வினாடிக்கு 11,100 கன அடி நீர் தெதுரு ஓயாவிற்கு வெளியேற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 இதேவேளை, இன்று (01) பிற்பகல் 01.15 மணியளவில் ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகளைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

 அதன்படி இரண்டு வான் கதவுகள் தலா ஐந்து அடி வீதமும், நான்கு வான் கதவுகள் தலா மூன்று அடி வீதமும், இரண்டு வான் கதவுகள் தலா இரண்டு அடி வீதமும் திறந்துவிடப்பட்டுள்ளன. 

 இதன் ஊடாக வினாடிக்கு 8,113 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

லங்கா4 (Lanka4) 

(வீடியோ இங்கே )




இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4