வளிமண்டல கோளாறு - மழையுடன் கூடிய வானிலை அடுத்த சில நாட்களுக்கு தொடரும்!
#SriLanka
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 hours ago
நாட்டைச் சுற்றி உருவாகியுள்ள வளிமண்ட கோளாறு காரணமாக தற்போது நிலவும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களுக்கு தொடரும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பெரும்பாலான இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், தீவு முழுவதும் மேகமூட்டமான வானம் காணப்படும் என்றும் வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
அதேபோல் மேற்கு, சபரகமுவ, மத்திய, தெற்கு, ஊவா, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும், அனுராதபுர மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீ-க்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஏற்படும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களில் இருந்து மக்களை பாதுகாக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )