மாலியில் ஜிஹாதிஸ்டு போராளிகள் நடத்திய தாக்குதல்களில் 70க்கும் மேற்பட்டோர் பலி

#Death #people #Attack #Lanka4 #Terrorists #Mali
Prasu
1 month ago
மாலியில் ஜிஹாதிஸ்டு போராளிகள் நடத்திய தாக்குதல்களில் 70க்கும் மேற்பட்டோர் பலி

மத்திய மாலியில் ஜிஹாதிஸ்டு போராளிகள் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், சமீபத்திய தாக்குதல்களால் இறந்தவர்களின் எண்ணிக்கை 70க்கும் அதிகமாக இருப்பதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமையன்று நடந்த தாக்குதல்களுக்கு அல் கொய்தா-இணைக்கப்பட்ட இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுக்கான ஆதரவு குழு (JNIM) உரிமை கோரியது.

அவர்கள் கிராமங்கள் மீது நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

தங்களது நிபந்தனைகளுக்கு உடன்பட மறுக்கும் கிராமங்களை இலக்கு வைத்து இந்த அமைப்பு தாக்குதல் நடத்தி வருகிறது.

முன்னதாக கடந்த வாரம் தாக்குதலில் மாலியின் பாதுகாப்பு அமைச்சர் சாடியோ காமாரா கொல்லப்பட்டார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4