மன்னாரில் மணல் அகழ்விற்கான அனுமதி தற்காலகிமாக இரத்து!

#SriLanka #Mannar #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 month ago
மன்னாரில் மணல் அகழ்விற்கான  அனுமதி தற்காலகிமாக இரத்து!

மன்னார் மாவட்டத்தில்   மணல் அகழ்வு அனுமதிகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மணல் அகழ்வு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளை கருத்தில் கொண்டு மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

சட்டவிரோத மணல் மோசடிகளைத் தடுத்தல், மணல் அகழ்வு அனுமதிகளை வழங்குதல் மற்றும் மணல் விலைகளை ஒழுங்குபடுத்துதல் ஆகியவை தொடர்பாக, மன்னார் மாவட்ட செயலகத்தில் நேற்று (10) சிறப்பு கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டதை தொடர்ந்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

இவ்விஷயம் குறித்து கருத்து தெரிவித்த, மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க, எதிர்கால மணல் அகழ்வு அனுமதிகள் ஒரு புதிய சட்ட கட்டமைப்பின் கீழ் வழங்கப்படும் என்று கூறினார்.

மேலும், அனுமதிகள் வழங்குவது தொடர்பான சில சட்ட விஷயங்கள் புதிதாக வரைவு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, மாவட்டச் செயலாளரின் இறுதி முடிவு மற்றும் மேற்பார்வையின் கீழ், அனுமதிகள் வழங்குவதற்கான புதிய விதிமுறைகள் தயாரிக்கப்படும் என்று அமைச்சரும், புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் இயக்குநரும் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )




இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4