தெனியாயவில் மர்ம வைரஸ் காய்ச்சல்: பாடசாலைகள் மூடல் - சுகாதாரத் துறை அவசர எச்சரிக்கை!

#SriLanka #School #Health #Department #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
தெனியாயவில் மர்ம வைரஸ் காய்ச்சல்: பாடசாலைகள் மூடல் - சுகாதாரத் துறை அவசர எச்சரிக்கை!

தெனியாய கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்களிடையே ஒரு வகை வைரஸ் காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதால், நிலைமையைக் கட்டுப்படுத்த அப்பகுதியிலுள்ள சில பாடசாலைகளைத் தற்காலிகமாக மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த வைரஸ் பிரதானமாக அசுத்தமான கைகள், உணவு அல்லது நீர் ஆகியவற்றின் மூலமும், சுவாசத் துளிகள் மற்றும் வைரஸ் படிந்துள்ள மேற்பரப்புகளைத் தொடுவதன் மூலமும் பரவக்கூடும் என சிறுவர் நல விசேட மருத்துவ நிபுணர் மருத்துவர் மகேஷக விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

தெனியாய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களிடம் பின்வரும் தீவிர அறிகுறிகள் அவதானிக்கப்பட்டுள்ளன: கடுமையான காய்ச்சல் மற்றும் தலைவலி. வாந்தி மற்றும் கழுத்து விறைப்பு. வெளிச்சத்தைப் பார்க்க இயலாமை மற்றும் சத்தங்களைக் கேட்கும்போது ஏற்படும் அசௌகரியம்.

இந்நோயைக் கட்டுப்படுத்த சவர்க்காரம் இட்டு முறையாகக் கைகளைக் கழுவுவதே மிக முக்கியமான காரணியாகும். துண்டுகள், உணவுப் பாத்திரங்கள் மற்றும் ஏனைய தனிப்பட்டப் பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

நோய் அறிகுறிகள் தென்படும் பிள்ளைகளை பாடசாலைக்கோ அல்லது பொது இடங்களுக்கோ அனுப்பாது வீட்டிலேயே வைத்திருப்பதுடன், உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.

இந்த வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் குணமடைந்த பின்னரும் பல வாரங்களுக்கு அவர்களின் சுவாசச் சுரப்புகள் மற்றும் மலம் வழியாக வைரஸை வெளியேற்றக்கூடும். 

எனவே, முழுமையாகக் குணமடைந்த பின்னரும் நீண்ட காலத்திற்குச் சுகாதார நடைமுறைகளைத் தொடர்ச்சியாகப் பின்பற்றுவது அவசியம் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளன

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4