மட்டக்களப்பில் இருந்து விமான நிலையம் சென்றவர்களுக்கு அதிர்ச்சி - வழியில் தீப்பற்றி எரிந்த வாகனம்!
#SriLanka
#Batticaloa
#Accident
#fire
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
1 month ago
மட்டக்களப்பு மண்முனை பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த வேன் ஒன்று நேற்று இரவு திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
இவ்விபத்தில் எவருக்கும் எந்த விதமான பாதிப்புக்களும் ஏற்படவில்லை என மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
கொக்கட்டிச்சோலையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்றுகொண்டிருந்த வேனே இவ்வாறு தீப்பற்றி எரிந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தில் வேன் முற்றாக எரிந்துள்ளதாகவும், தடயவியல் பொலிஸ் பிரிவு வரவழைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் குறித்த பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
(வீடியோ இங்கே )
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே