திமுக இளைஞரணி ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த உதயநிதி ஸ்டாலின்
#Election
#Tamil Nadu
#Lanka4
#parties
#M.K.Stalin
#L4
Prasu
3 hours ago
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் அடைந்த தோல்வி குறித்து கள ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக 36 பேர் கொண்ட கள ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழு தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் செய்து மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள், தொகுதிப் பார்வையாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தி.மு.க தொண்டர்களை நேரடியாக சந்தித்து அவர்களது கருத்துக்களையும் பரிந்துரைகளையும் பெற்று கள ஆய்வு அறிக்கையை ஜூன் 5ம் திகதிக்குள் தி.மு.க தலைவர் மு.கஸ்டாலினிடம் சமர்ப்பிக்க உள்ளனர்.
இந்த நிலையில், திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் வரும் மே 23ம் திகதி நடைபெறும் என்று அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி அறிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே )