59 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் இடம் பிடித்த காங்கிரஸ் கட்சி

#Election #Tamil Nadu #Lanka4 #Vijay #ChiefMinister #Cabinet
Prasu
3 hours ago
59 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் இடம் பிடித்த காங்கிரஸ் கட்சி

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. 

இதனால், தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்கு, காங்கிரஸ், வி.சி.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகளிடம் தனித்தனியே பேச்சுவார்த்தை நடந்தது.

இதில், காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவும், சி.பி.ஐ, சி.பி.எம், வி.சி.க, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவும் கிடைத்தது. 

இந்நிலையில், தமிழக அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதில், தமிழக அமைச்சரவையில் காங்கிரசுக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. 

இதன்படி அக்கட்சி சார்பில் ராஜேஷ்குமார், விஸ்வநாதன் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.

அவர்கள் இருவரும் அமைச்சர்களாவதற்கு காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஒப்புதல் அளித்து உள்ளனர். 

இதனால், 1967ம் ஆண்டுக்கு பின்னர் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி இடம் பெறுகிறது குறிப்பிடத்தக்கது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!