நாடு முழுவதும் வலுப்பெறும் தென்மேற்குப் பருவமழை!! 70 MM மேல் மழைவீழ்ச்சி பதிவாகும்!
நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை படிப்படியாக உருவாகி வருவதால், அடுத்த சில நாட்களில் மழை நிலைமை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது.
இது தொடர்பில் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேற்கு, சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில இடங்களில் 75 மி.மீ-க்கு மேல் ஓரளவு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் மத்திய மலைகளின் மேற்குச் சரிவுகள், வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் அவ்வப்போது மணிக்கு சுமார் (30-40) கி.மீ வேகத்தில் ஓரளவு பலமான காற்று வீசக்கூடும் என்றும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க, பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
(வீடியோ இங்கே )