அதிகப்படியான கடன் வாங்குவதைக் குறைக்கவே வட்டி விகிதங்கள் உயர்த்தப்படுகின்றன!! நந்தலால் வீரசிங்க!
#SriLanka
#nandalal weerasinghe
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 hours ago
கொள்கை வட்டி விகிதங்களை அதிகரிப்பது சந்தை வட்டி விகிதங்களின் உயர்வுக்கு வழிவகுக்கிறது என இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (26) நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், கொள்கை வட்டி விகிதங்களை உயர்த்துவதன் முக்கிய நோக்கம் சந்தைக் கடன் வழங்கும் விகிதங்களை மேல்நோக்கிச் செலுத்துவதே ஆகும் என்று குறிப்பிட்டார்.
அத்துடன் பொருளாதாரத்தில் அதிகப்படியான கடன் வாங்குவதைக் குறைப்பதேஇந்த நடவடிக்கையின் நோக்கம் என்று விளக்கியுள்ளார்.
மேலும், பொருளாதாரம் இதுவரை எந்தச் சுருக்கத்தையும் சந்திக்கவில்லை என்றும், அடுத்த இரண்டு காலாண்டுகளில் தொடர்ந்து வளர்ச்சி அடையும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே )