கைபேசிக்காக நடந்த கொலை : சினிமாபாணியில் மூடி மறைக்க முயன்ற சிறுவன் கைது!

#SriLanka #Batticaloa #Accident #Crime #ADDA #ADDAADS #ADDAPOOJA
Thamilini
2 hours ago
கைபேசிக்காக நடந்த கொலை : சினிமாபாணியில் மூடி மறைக்க முயன்ற சிறுவன் கைது!

  மட்டக்களப்பு - ஏறாவூர் 5ஆம் குறிச்சி பகுதியில் 11 வயதுடைய சிறுமி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பான பின்னணி வெளியாகியுள்ளது. 

இதன்படி கைப்பேசியை பயன்படுத்துவதில் அண்ணன் மற்றும் தங்கைக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறிச் சென்ற நிலையில் குறித்த சிறுவன் 11 வயது சிறுமியை கொலை செய்துள்ளார். 

சிறுமியின் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

தங்கை உயிரிழந்ததை தொடர்ந்து அவரது உடலை குளியலறையில் வைத்த அண்ணன், விபத்து நடந்ததுபோல் சம்பவத்தை ஜோடிக்க முனைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இதனைத் தொடர்ந்து 15 வயதுடைய சந்தேக நபரான அண்ணன் ஏறாவூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!