யாழில் ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய் மாயம்!! 19 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கைவரிசை!

#SriLanka #Jaffna #Police #Robbery #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
1 hour ago
யாழில்  ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய் மாயம்!! 19 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கைவரிசை!

யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறையில் உள்ள வீடொன்றில் இருந்து ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய் பணம் களவாடப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கெருடாவிலைப் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் மற்றும் 19 வயது இளைஞன் ஆகியோரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில் நெடுங்கேணியில் உள்ள ஒருவரின் பணிப்புரைக்கு அமைய மேற்படி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. 

அத்துடன் கொள்ளையடிக்கப்பட்ட பணம் நெடுங்கேணியில் உள்ள காணியொன்றில் புதைத்து வைக்கப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது. 

அவர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய களவாடப்பட்ட பணத்தில் இருந்து 74 இலட்சம் ரூபாய் மீட்கப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் நெடுங்கேணியைச் சேர்ந்த மற்றுமொரு சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

 கைதுசெய்யப்பட்ட இரு சந்தேகநபர்களையும் நீதிமன்ற அனுமதி பெற்று, தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய வல்வெட்டித்துறை பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!